13 வயது பாடசாலை மாணவி கர்ப்பம்: சகோதரன் கைகது!

தனது 13 வயது சகோதரியை பாலியல் துஷ்பிரயோகம் செய்து கர்ப்பமாக்கியமை, 11 வயது சகோதரியை பாலியல் துஷ்பிரயோகம் செய்தமை ஆகிய குற்றச்சாட்டில் 24 வயதான இளைஞனை கலவான பொலிசார் கைது செய்துளள்னர்.

இரத்தினபுரியின்,கலவான பகுதி பாடசாலையொன்றில் 13 வயதான மாணவியொருவரின் உடலில் தென்பட்ட மாற்றத்தை அவதானித்த ஆசிரியர்கள், அது குறித்து கலவான பொலிசாருக்கு அறிவித்தனர்.

அவர் மருத்துவ பரிசோதனைக்குட்படுத்தப்பட்ட போது சிறுமி கர்ப்பமாக இருப்பது தெரிய வந்தது. சிறுமியிடம் நடத்தப்பட்ட விசாரணையில், சகோதரனான 24 வயதுடைய இளைஞனால் துஷ்பிரயோகம் செய்யப்பட்டிருந்தது தெரிய வந்தது.

இதையடுத்து இளைஞன் கைது செய்யப்பட்டு நடத்தப்பட்ட விசாரணையில், 11 வயது சகோதரியையும் அவர் துஷ்பிரயோகம் செய்தது தெரிய வந்தது.

இவர்களின் தாய் குடும்பத்தை பிரிந்து, பிறிதொரு கல்யாணம் செய்து, 4 குழந்தைகளுடன் வசித்து வந்தார். அவர்களிற்கு உணவளித்ததை தவிர, வேறு ஒன்றையும் தான் அறிந்திருக்கவில்லையென அவர் தெரிவித்துள்ளார்.

கைதான இளைஞர் இரத்தினபுரி மேலதிக நீதவான் முன்னிலையில் கடந்த 4ஆம் திகதி முற்படுத்தப்பட்டபோது, எதிர்வரும் 16ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்க உத்தரவிட்டார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here