75 அடி பள்ளத்தில் விழுந்த வாகனம்: அக்கரப்பத்தனை பிரதேசசபை தலைவர் தெய்வாதீனமாக தப்பித்தார்!

75 அடி பள்ளத்தில் வீழ்ந்தது ஜீப் – தெய்வாதீனமாக உயிர் தப்பினார் கதிர்ச்செல்வன்
அக்கரப்பத்தனை பிரதேசசபை தலைவர் பயணித்த வாகனம் சுமார் 75 அடி பள்ளத்தில் பாய்ந்து விபத்துக்குள்ளானதாக பொலிஸார் தெரிவித்தனர்.
தலவாகலை டயகம பிரதான வீதியின் மன்ராசி பகுதியிலே நேற்று முன்தினம் இரவு இவ் விபத்து இடம்பெற்றுள்ளது.
பிரதேசசபை தலைவர் தனது வீட்டிற்கு சென்றுகொண்டிருந்த போதே சாரதியின் கட்டுப்பாட்டை மீறீ பள்ளத்தில் பாய்ந்துள்ளது.
விபத்துக்குள்ளான பிரதேசசபைக்கு சொந்தமான ஜீப் ரக வாகனமானது கடும் சேதமாகியுள்ளதுடன் சபைத்தலைவர் கதிர்ச்செல்வன் மற்றும் சாரதி தெய்வாதீனமாக உயிர் தப்பியுள்ளனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here