பாலம் உடைந்ததால் 6 வருடங்களாக பிரிந்திருக்கும் இரண்டு ஊர்கள்!

கண்டி மாவட்டம் உடபளாத்த பிரதேசத்திற்கு உட்பட்ட கம்பளை நகர சபையையும் கங்கஹிகலகோரல பிரதேச சபைக்கு உட்பட்ட கம்பலவெல பிரதேசத்தையும் இணைக்கும் கம்பலவெல பிரதான பாலத்தின் ஒரு பகுதி உடைவடைந்து உள்ளது.

இந்த பாலம் உடைவடைந்து 06 வருடங்கள் ஆன போதும் இதனை திருத்துவதற்கான எந்தவித நடவடிக்கைகளும் இது வரைக்கும் யாராலும் முன்னெடுக்கவில்லை.

இதனால் கம்பளை நகர சபைக்கும் கங்கஹிகலகோரல பிரதேச சபைக்கும் உட்பட்ட பிரதேசங்களின் தொடர்பு முற்றாக துண்டிக்கபட்டுள்ளதுடன் குறித்த பிரதேசங்களுக்கு செல்வதற்கு பல கிலோமீற்றர் தூரம் செல்ல வேண்டியுள்ளது. இந் நிலையில் இந்த பாலத்தை அமைத்து தருமாறுகோரி விடுகிறார்கள்.

பாலத்தை அமைத்து தருமாறு மக்கள் கோரிக்கை விடுத்து பல ஆர்பாட்டங்களையும் நடாத்தினர். இது வரைக்கும் அவையும் வெற்றியளிக்கவில்லை.

இந்த பாலத்தின் ஊடாகவே கம்பலவெல பிரதேச மக்கள் தங்களின் நாளாந்த தேவைகளுக்காவும் மாணவர்கள் தங்கள் கல்வி நடவடிக்கைகளுக்காகவும் கம்பளை நகரத்திற்கு வந்து செல்கின்றனர்.

தற்போது இதற்காக பல கிலோ மீற்றர் தூரம் நடந்தும் வாகனங்களுக்கு அதிக பணம் கொடுத்தும் தங்கள் வீடுகளுக்கு செல்ல வேண்டியுள்ளது.

இந் நிலையில் இந்த பாலத்தினை சம்பந்தபட்டவர்கள் கவனத்தில் கொண்டு திருத்தி அமைத்து தருமாறு மக்கள் கோரிக்கை விடுக்கின்றனர்.

-பா.திருஞானம்-

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here