சுஷாந்த் சிங் ராஜ்புட் கஞ்சா புகைப்பார்: சமையலர் அதிர்ச்சி வாக்குமூலம்!

மறைந்த பாலிவுட் நடிகர் சுஷாந்த் சிங் ராஜ்புட் கஞ்சா புகைப்பதை, 2018 இல் அவரிடம் வேலைக்கு சேர்ந்த போதிலிருந்து பார்த்து வந்ததாக, அவரது சமையலர் தீபேஷ் சாவந்த் கூறியுள்ளார்.

ஜூன் மாதம் தனது மும்பை அபார்ட்மென்டில் தூக்கிட்டு இறந்த நிலையில் கிடந்தார் நடிகர் சுஷாந்த் ராஜ்புட். அவரது மரண வழக்கை சி.பி.ஐ விசாரிக்கிறது.

அவரது மரணத்துடன் போதைப் பொருள் கும்பலுக்கும் தொடர்பிருப்பது தெரியவந்துள்ளது. சுஷாந்தின் குடும்பத்தினர் தங்கள் மகனை காதலி ரியா தான் கொலை செய்துவிட்டதாக வெளிப்படையாக குற்றம்சாட்டி வருகின்றனர்.

நேற்று போதை பொருள் தடுப்பு பிரிவு போலீசார் காதலி ரியாவின் சகோதரர் ஷோவிக் சக்ரவர்த்தி, சுஷாந்தின் மேனேஜர் சாமுவேல் மிரண்டா ஆகியோரை கைது செய்தனர். அவர்கள் அளித்த வாக்குமூலத்தின் படி, போதைப் பொருள் விற்பனையாளர்களான கைசன் இப்ராஹிம், சயித் விலாத்ரா ஆகியோரும், அவர்களிடம் கொடுக்கல் வாங்கலில் ஈடுபட்ட அப்துல் பாசித் பரிஹார் என்பவரையும் கைது செய்தனர்.

இந்த நிலையில் சுஷாந்தின் சமையலர் தீபேஷ் சாவந்த், போதை பொருள் தடுப்பு போலீசாரிடம் அளித்த வாக்குமூலம் வெளியாகியுள்ளது.

அதில், “செப்டம்பர் 2018 இல் நான் சுஷாந்திடம் வேலைக்கு சேர்ந்தேன். சேர்ந்த இரண்டு மூன்று நாட்களில் அவர் கஞ்சா புகைப்பதை கண்டேன். அப்பாஸ் கலூய் என்பவர் சுஷாந்துக்கு கஞ்சா தயாரித்து தருவார். இருவரும் சேர்ந்து புகைப்பார்கள். கரண் என்பவர் தான் முதன் முதலில் சுஷாந்திற்கு கஞ்சா பழக்கப்படுத்தினார். அவர் முழுப் பெயர் எனக்கு தெரியாது. நான் ஒருபோதும் சுஷாந்திற்கு ஐயாவுக்கு கஞ்சா வாங்கி தந்ததில்லை” என கூறியுள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here