பேருந்தில் யன்னலுக்கு வெளியே நீட்டப்பட்டிருந்த இளைஞனின் கை துண்டானது: மீளப் பொருத்த வைத்தியர்கள் பகீரத பிரயத்தனம்!

பஸ் விபத்தில் மணிக்கட்டுடன் வேறாகிய இளைஞனின் கையின் பகுதியை இணைக்க இரத்தினபுரி அரச வைத்திசாலை வைத்தியர்கள் பெரும் பிரயத்தனத்தில் ஈடுபட்டு வருவதாக இரத்தினபுரி அரச வைத்தியசாலை சத்திரசிகிச்சைப் பிரிவின் வைத்தியர்கள் தெரிவித்தனர்.

இரத்தினபுரி எம்பிலிப்பிட்டிய வீதியில் கொடகவெல கலஹிட்டய ப குதியில் இவ்விபத்து இடம்பெற்றுள்ளது. கொழும்பு – பதுளை வீதியில் மொனராகலையில்கருந்து கொழும்பு நோக்கி சென்று கொண்டிருந்த இலங்கை போக்குவரத்து சபைக்கு சொந்தமான பஸ் வண்டியும் இரத்தினபுரிபுரியிலிருந்து எம்பிலிப்பிட் டிய நோக்கி சென்று கொண்டிருந்த தனியார் வண்டியும் மோதியதால் இவ்விபத்து இடம்பெற்றுள்ளது.

கடந்த 4ஆம் திகதி மாலை இடம்பெற்ற இவ்விபத்தின் போது இ.போ.ச பஸ் வண்டி, தனியார் பஸ் வண்டி மீ து மோதியதால் இவ்விபத்து இடம்பெற்றதாகவும் பொலிசார் தெரிவித்தனர்.

தனியார் பஸ் வண்டியின் பின் ஆசனத்தின் வலது பக்க மூலை ஜன்னலில் கையை வைத்தவாறு குறித்த இளைஞன் பயணித்துள்ளதாகவும் இ.போ.ச. பஸ் வண்டி தனியார் பஸ் மீ து மோதியதால் யன்னலில் தனது கையை வைத்திருந்த இளைஞனின் கை பாதிப்புக்குள்ளாகி துண்டிக்கப்பட்டுள்ளதாகவும் பொலிசார் தெரிவித்தனர்.

கையை இழந்தவர் கொடக்கவெல பிரதேசத்தை சேர்ந்த 20 வயதான இளைஞர் எனவும் கஹவத்தைப் பொலிசார் இ.போ.ச. பஸ் வண்டியின் சாரதியை கைது செய்துள்ளனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here