நடிகையை மணந்தார் ஆரவ்!

பிக்பாஸ் நிகழ்ச்சி முதல் சீசன் டைட்டில் வின்னரான ஆரவ், சரண் இயக்கத்தில் வெளியான மார்க்கெட் ராஜா எம்.பி.பி.எஸ் படத்தின் மூலம் நாயகனாக அறிமுகமானார். ராஜபீமா உள்ளிட்ட சில படங்களில் ஹீரோவாக நடித்து வருகிறார்.

பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்துகொண்ட போது நடிகை ஓவியா, ஆரவ்வை ஒரு தலையாக காதலித்தார். நிகழ்ச்சி முடிந்த பிறகும் இருவரும் காதலித்து வருகிவதாக கிசுகிசுக்கப்பட்டது.

இந்நிலையில் ஆரவ்விற்கும், ஜோஷ்வா படத்தில் நாயகியாக நடித்து வரும் ராஹிக்கும் இன்று (6) காலை சென்னையில் திருமணம் நடைபெற்றது.

இருவருமே பல வருடங்களாகக் காதலித்து வந்த நிலையில், பெற்றோர் சம்பந்தத்துடன் இந்த திருமணம் நடந்துள்ளது. கொரோனா அச்சுறுத்தலால் காரணமாக நெருங்கிய உறவினர்கள் மற்றும் நண்பர்கள் மட்டுமே திருமணத்தில் கலந்து கொண்டனர்.

இயக்குநர் கே.எஸ்.ரவிகுமார், சரண், விஜய், ரஞ்சித் ஜெயக்கொடி, வருண், ப்ரதீப் கிருஷ்ணமூர்த்தி மற்றும் ஆரவ்வுடன் பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டவர்கள் நேரில் வந்து மணமக்களுக்கு வாழ்த்துத் தெரிவித்தார்கள்.

இதர திரையுலகப் பிரபலங்கள் தங்களுடைய சமூக வலைதளம் மூலம் வாழ்த்துத் தெரிவித்து வருகிறார்கள்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here