புனரமைக்கப்பட்ட புனித அந்தோனியார் ஆலயம் திறப்பு!

மட்டக்களப்பு மாவட்டத்தில் வவுணதீவு பிரதேசத்தின் உன்னிச்சை 6ம் கட்டையில் மிக புராதான பழமைவாய்ந்த புனித அந்தோனியார் தேவாலயமானது கடந்த காலங்களில் மக்கள் இடம்பெயர்ந்தமையினால் கைவிடப்பட்டு, அழிக்கப்பட்ட நிலையில் கடந்த 40 வருடங்களுக்கு மேலாக பற்றை காடுகள் அடர்ந்து காணப்பட்டது.

இவ்வாலயத்தின் நிலை குறித்து மட்டக்களப்பு மறை மாவட்ட ஆயர் பொன்னையா ஜோசப் ஆண்டகைக்கு மக்கள் முன்வைக்கப்பட்ட கோரிக்கைக்கு அமைவாக அதனை மீளவும் புனரமைக்கும் பணியினை முன்னெடுக்கப்பட்டது.

முன்னா் மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபர் மாணிக்கம் உதயகுமார் அவர்களின் அயராத முயற்சியுடனும், ஊர் மக்கள் மற்றும் பண உதவிகளை வழங்கிய பரோபகாரிகளின் பங்களிப்புடன் இவ்வாலயம் மீளவும் அமைக்கப்பட்டு இன்று (6) திறந்து வைக்கப்பட்டது.

ஆயித்தியமலை சதா சகாயமாதா திருத்தலத்தின் நிறைவு நாள் இன்று புனித அந்தோனியார் ஆலயம் மட்டக்களப்பு மறை மாவட்ட ஆயர் பொன்னையா ஜோசப் ஆண்டகை தலைமையில், மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபர் திருமதி கலாமதி பத்மராஜா, முன்னாள் அரசாங்க அதிபர் மா.உதயகுமார், பாராளுமன்ற உறுப்பினர் இரா.சாணக்கியன், மாநகர முதல்வர் ரி.சரவணபவன் மற்றும் கிழக்கு பல்கலைகழக சிரேஸ்ட விரிவுரையாளர் கலாநிதி சந்திரகாந்தா, வவுணதீவு உதவி பிரதேச செயலாளர் திருமதி சதா சுபா ஆகியோரினால் திறந்து வைக்கப்பட்டது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here