அதிவேகமாக வந்த டிப்பர் தேவாலயத்திலிருந்து திரும்பியவரை மோதிக் கொன்றது!

ஏறாவூர் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட ஆறுமுகத்தான் குடியிருப்பில் டிப்பர் வாகனம் மோதியதில் குடும்பஸ்தர் ஒருவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார்.

இன்று (06) காலை 10.30 மணியளவில் இந்த சம்பவம் இடம்பெற்றது.

கொம்மாதுறை, கலைவாணி வீதியைச் சேர்ந்த கிருஷ்ணபிள்ளை கவேந்திரன் (46)என்பவரே உயிரிழந்துள்ளதாக அவரது உறவினர்கள் அடையாளம் காட்டியுள்ளனர்.

ஆறுமுகத்தான்குடியிருப்பிலுள்ள கிறிஸ்தவ தேவாலயத்தில் இன்று ஞாயிற்றுக்கிழமை ஆராதனையில் பங்குகொண்டு விட்டு, துவிச்சக்கரவண்டியில் பிரதான வீதியூடாக வீடு திரும்பும்போது பின்னால் வேகமாக வந்த டிப்பர் மோதியதில் குறித்த நபர் உயிரிழந்துள்ளார்.

பிரேத பரிசோதனைக்காக சடலத்தை மட்டக்களப்பு போதனா வைத்தியசாலைக்கு அனுப்பிவைக்கப்பட்டுள்ளது,

மஹியங்கனையை சேர்ந்த டிப்பர் வண்டியின் சாரதி ஏறாவூர்ப் பொலிஸார் கைதுசெய்யப்பட்டிருக்கிறார்.

மேலதிக விசாரனைகளை ஏறாவூர் பொலிசார் தொடர்கின்றனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here