ரெலோ ஸ்தாபக தலைவரின் மனைவி மரணம்: யாழில் வரவேற்பு விழா!

யாழ் நாவலர் கலாசார மண்டபத்தில் இன்று ரெலோவில் வெற்றி பெற்ற மூன்று நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கும் வரவேற்பு விழா ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

யாழ்ப்பாண ரெலோ ஏற்கனவே இரண்டுபட்டுள்ளது. கடந்த நாடாளுமன்ற தேர்தலில் போட்டியிட்டு தோல்வியடைந்த சுரேன், முன்னாள் மாகாணசபை உறுப்பினர் சபா.குகதாஸ் தரப்பினர் இந்த விழாவை ஏற்பாடு செய்துள்ளனர்.

ரெலோவின் கணிசமான பழைய செயற்பாட்டாளர்கள் அதிருப்தியடைந்த நிலையில் மறு தரப்பில் உள்ளார்கள். அவர்களை தவிர்த்து, புதிய அணியொன்றை கட்டியெழுப்பலாமென்ற நோக்கத்துடன் இந்த அணி செயற்பட்டு வருவதாக தெரிகிறது.

கடந்த நாடாளுமன்ற தேர்தலில் ரெலோ வேட்பாளரால் பெரியளவில் வாக்கை பெற முடியவில்லை. இதற்கு ரெலோவின் யாழ் மாவட்ட பிளவுதான் முதன்மை காரணம்.

யாழில் ரெலோவை மீள கட்டியெழுப்பும் முயற்சியில் சுரேந்திரன்- குகதாஸ் அணி ஈடுபட்டுள்ளது. இதற்காக புதிய உறுப்பினர்களை இணைத்து, ஒவ்வொருவரும் குறிப்பிட்ட தொகை உறுப்பினரை இணைக்க வேண்டுமென கட்டளை பிறப்பிக்கப்பட்டுள்ளது. அப்படி இணைக்கப்படும் புதியவர்கள்- அரசியலின் அரிச்சுவடியை இனித்தான் கற்க ஆரம்பிக்கவுள்ளவர்கள்- உடனடியாகவே கட்சியின் முக்கிய பொறுப்புக்களில் இணைக்கப்படுகிறார்கள்.

இது எங்கே போய் முடியப் போகிறதோ தெரியவில்லையென, அந்த அணியில் இருப்பவர்களே தலையில் அடித்துக் கொள்கிறார்கள்.

புதிய அணியை உற்சாகப்படுத்த ஒரு நிகழ்வை ஏற்பாடு செய்ய வேண்டும்- அப்படியென்றால்த்தான் அது மாகாணசபை தேர்தலில் கைகொடுக்கும் என்பதாலேயே இன்றைய வரவேற்பு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

தேர்தலில் வெற்றிபெற்றவர்களிற்கு வரவேற்பு நடத்துவது சாதாரண விடயம். வழக்கமும் கூட. ஆனால், நேற்று ரெலோவின் ஸ்தாபக தலைவர்களில் ஒருவராக குட்டிமணியின் மனைவி காலமாகி விட்டார்.

குட்டிமணியின் மனைவிக்கு நீண்டகாலமாக- அமைப்பு செயற்பாட்டு ரீதியாக தொடர்பில்லை. அதனால் யாழ்ப்பாணத்தில் புதிதாக இணைக்கப்பட்ட உறுப்பினர்களிற்கு- வீதியால் செல்லும்போது மரணவீடுகளை கடந்த செல்வதை போலவே இருக்கும்.

ஆனால், வரவேற்கப்படும் தலைவர்களிற்கும் அப்படியான உணர்வா இருக்கும்?

அவர்கள் எப்படி இந்த வரவேற்பு நிகழ்ச்சியில் கலந்து கொள்கிறார்கள் என்பது தெரியவில்லை. உண்மையில் இன்றைய நிகழ்ச்சியை ரெலோ இரத்து செய்திருக்க வேண்டும். ஆயினும், நிகழ்ச்சி இன்று நடக்கிறது.

ரெலோவின் மூத்த உறுப்பினர்கள் பலர் தமது அதிருப்தியை தெரிவித்து வருகின்றனர். இது தொடர்பில் வன்னியிலுள்ள ரெலோவின் மூத்த தலைவர் ஒருவரை தொடர்பு கொண்டு பேசியபோது, குட்டிமணியின் ஆன்மா ரெலோவை மன்னிக்கட்டும் என்றார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here