நீதித்துறை, சட்டவாக்கத்துறைய பலவீனப்படுத்தும் கோட்டா அரசு!

அரசியலமைப்பின் 20 வது திருத்தத்தை அறிமுகப்படுத்துவதன் மூலம் சட்டவாக்கசபையையும் நீதித்துறையையும் பலவீனப்படுத்த அரசாங்கம் முயற்சிப்பதாக எதிர்க்கட்சி குற்றம் சாட்டியுள்ளது.

ஐக்கிய மக்கள் சக்தியின் தலைமையகத்தில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் பேசிய நாடாளுமன்ற உறுப்பினர் எஸ்.எம்.மரிக்கர், முன்மொழியப்பட்ட வரைவு மூலம் இரட்டை குடியுரிமை பெற்றவர்கள் நாடாளுமன்றத்திற்குள் நுழைய முடியும் என்பதையும் சுட்டிக்காட்டினார்.

20 ஆவது திருத்தம் ஜனாதிபதியை சர்வாதிகாரியாக மாற்றுவதற்கான ஒரு வழியாகும் என்று அவர் கூறினார். அத்துடன், தேசிய பாதுகாப்பில் ஜனாதிபதியின் பொறுப்புக்கூறலை மட்டுப்படுத்துகிறது என்றும் குறிப்பிட்டார்.

20 ஆவது திருத்தத்தின் மூலம், சுயாதீன ஆணைக்குழுக்களின் உயரதிகாரிகளையும், அரச உயரதிகாரிகளையும் ஜனாதிபதியே நியமிப்பதன் மூலம், ஆணைக்குழுக்களால் பலனில்லையென்பதை சுட்டிக்காட்டினார்.

பிரதம நீதியரசரை ஜனாதிபதி நியமிப்பதால் நீதித்துறை பலவீனமடையும், அரசியலமைப்பின் எல்லைக்குள் சுதந்திரமாக பேசுவதற்கான உரிமை மீறப்படுவதாக அவர் கூறினார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here