முட்டை விலை குறைகிறது!

நாடு முழுவதும் நாளை முதல் ஒரு முட்டையின் விலையை 2 ரூபாவால் குறைக்க முட்டை உற்பத்தியாளர்கள் சங்கம் முடிவு செய்துள்ளது.

பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவுடன் நேற்று பேச்சுவார்த்தை நடத்திய பின்னர் இந்த முடிவு எட்டப்பட்டுள்ளது.

முட்டைகளின் விலை மற்றும் உற்பத்தியாளர்கள் எதிர்கொள்ளும் பிரச்சனைகள் குறித்து தங்காலையில் உள்ள கார்ல்டன் இல்லத்தில் நேற்று கலந்துரையாடல் நடத்தப்பட்டது.

அதன்படி, வெள்ளை முட்டையின் மொத்த விலை ரூ 19.50 ஆகவும், சிவப்பு முட்டையின் விலை ரூ 20 ஆகவும் குறைக்கப்படும் என்று சங்கத்தின் தலைவர் ஆர்.எம்.சரத் தெரிவித்தார்.

மேலும், ஒரு வெள்ளை முட்டையின் சில்லறை விலை ரூ 21 ஆகவும், சிவப்பு முட்டையின் விலை ரூ 22 ஆகவும் குறையும்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here