வீடு, மீன், சைக்கிள் இளைஞரணிகள் சந்திப்பு!

தமிழ் தேசிய நிலைப்பாட்டில் உள்ள கட்சிகளின் இளைஞர் அணிகளை ஒன்றிணைக்கும் முயற்சி மேற்கொள்ளப்பட்டுள்ளது. இதன்படி, இன்று தமிழ் அரசு கட்சி, தமிழ் மக்கள் தேசிய கூட்டணி, தமிழ் தேசிய மக்கள் முன்னணி- மணிவண்ணன் பிரிவின் இளைஞர் அணிகள் ஒன்றாக கலந்துரையாடலில் ஈடுபடுகிறார்கள்.

யாழ்ப்பாண பல்கலைகழக மாணவர் ஒன்றிய ஏற்பாட்டில் இன்று மதியம் இந்த கலந்துரையாடல் இடம்பெறுகிறது.

யாழ்ப்பாண பல்கலைகழக மாணவர் ஒன்றியத்தின் பின்னணியில் புலம்பெயர் தரப்பொன்றே இந்த முன்முயற்சியை எடுத்துள்ளதாக அறிய முடிகிறது.

மூன்று தரப்பின் இளைஞர் அணியையும் ஒன்றிணைந்த செயற்பட வைப்பதன் முதற்கட்டமாக, தியாகி திலீபனின் நினைவாக முள்ளிவாய்க்காலில் இருந்து மேற்கொள்ளப்படவுள்ள நடைபயணத்தில் இந்த தரப்புக்கள் ஓரணியில் செயற்படுவது பற்றி கலந்துரையாடப்படவுள்ளது.

தொடர்ச்சியாக, அனைத்து விடயங்களிலும் ஒன்றிணைந்து செயற்படுவது குறித்தும் கலந்துரையாடப்படவுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here