கம்பளை பேருந்து நிலையத்தில் வாழும் மில்லியனரான மூதாட்டி!

கம்பளை இ.போ.ச பேருந்த நிலையத்தில் வாழும் மூதாட்டியொருவர் பற்றிய செய்திகள் சமூக ஊடகங்களில் பரபலமாகியுள்ளது. பிரபுத்துவ குடும்பத்தை சேர்ந்த அந்த பெண்மணி, தேவையான பணமிருந்தும், உறவுகள் இல்லாத நிலையில் பேருந்து நிலையத்தில் அலைந்து திரியும் நிலைமைக்கு ஆளாகியிருக்கிறார்.

பெரும் செல்வந்த பின்னணியுடைய பெற்றோரிற்கு பிறந்து, அரண்மனை போன்ற வீட்டில் வசித்து, வாழ்க்கையின் பிற்பகுதியில் தனக்கு துணையாக யாருமில்லாத நிலையில், முற்றிலும் உதவியற்ற நபராக மாறி, சொத்துக்களையும் விற்று, அவர் இந்த நிலைமைக்கு ஆளாகியுள்ளார்.

கம்பளை பேருந்து நிலையத்தையே தற்போது அவர் வசிப்பிடமாக வைத்திருக்கிறார்.

80 வயதான அவரை பிச்சையெடுப்பவராக யாரும் கருதவில்லை. சுத்தமாகவும், நேர்த்தியாகவும் காணப்படும் அவரை, பேருந்து நிலையத்தை விட்டு வெளியேற்ற யாரும் முனையவுமில்லை.

அவரிடம் ஒரு சூட்கேஸ் மட்டுமே இருந்தது. அதை மிக கவனமாக வைத்திருந்தார் என்பதை அவரை தொடர்ந்து அவதானித்து கொண்டிருந்தவர்கள் கண்டிருக்கிறார்கள்.

அந்த பெண்மணிக்கு பேருந்து நிலையத்தில் ஒரு சிறிய இடத்தை, மேலாளர் ஒதுக்கியும் கொடுத்துள்ளார்.

இதுவரை அவரை யாரும் பெரிதாக கண்டுகொள்ளவில்லை. அவரது பின்னணியை ஆராயவுமில்லை.

கடந்த 29ஆம் திகதி இரவு அவரது சூட்கேஸ் திருடப்பட்டு விட்டது. அது குறித்து கம்பளை பொலிசாருக்கு அது குறித்து முறையிட்டுள்ளார். அவரது முறைப்பாட்டை கேட்ட பொலிசார் அதிர்ந்து விட்டனர்.

சூட்கேஸிற்குள் 800,000 ரூபா மதிப்புள்ள தங்க நெக்லஸ், ஆறு தங்க மோதிரங்கள் மற்றும் வங்கிப் புத்தகங்கள் உள்ளிட்ட முக்கிய ஆவணங்கள் இருந்துள்ளது.

இந்த தகவலை கேட்ட பின்னரே பொலிசாருக்கு தூக்கிவாரிப் போட்டது. அதுவரை, கம்பளை பேருந்து தரிப்பிடத்தில் வாழும் பெண்ணொருவரின் முறைப்பாட்டை கேட்கிறோம் என சாதாரணமாகவே இருந்தவர்கள், அவர் சொன்ன தகவலை கேட்ட பின்னர் திகைத்து விட்டனர்.

இவ்வளவு பெருந்தொகை பணத்துடன் தெருவில் வாழும் அந்த பெண் யார் என பொலிசாருக்கு தலையை சுற்ற தொடங்கிய பின்னர், அவரை பற்றி விபரங்களை துருவத் தொடங்கினார்கள். அவரிடம் மேலதிகமாக இருந்த பையிலிருந்த ஆவணங்களை பரீட்சித்தனர்.

65 இலட்சம் ரூபா நிலையான வைப்பு செய்யப்பட்ட வங்கிப் புத்தகம், உடமையில் 75,000 பணம், மேலும் சில தங்க ஆபரணங்கள் அவரிடமிருந்தன.

அவரிடமிருந்து திருடப்பட்ட சூட்கேஸிலிருந்த தங்கப் பொருட்கள் திருடப்பட்ட பின்னர், குப்பைத்தொட்டியில் போடப்பட்டிருந்த நிலையில் மீட்கப்பட்டது.

அவரிடம் தொடர்ந்த விசாரணையில், அந்த பெண் அந்த பகுதியில் வாழ்ந்த ஒரு பிரபுத்துவ பெண். அவர் திருமணமாகாதவர். கம்பளை பேருந்து தரிப்பிடத்திற்கு அருகில் ஒரு அடுக்குமாடி கட்டிடத்தை சொந்தமாக வைத்திருந்திருக்கிறார். பின்னர் அவர் அந்த கட்டிடத்தை மற்றொரு நபருக்கு 4 மில்லியனுக்கு விற்றார்.

கேகாலை, பம்பரதெனிய பகுதியில் அவரது நெருங்கிய உறவினர்கள் இன்னும் வாழ்வதாகவும், தனது உடன் பிறந்தவர்கள் தற்போது இந்தியாவில் வசிப்பதாகவும் தெரிவித்துள்ளார்.

உறவுகள் இல்லாத வாழ்க்கையில் பணத்தில் அர்த்தம் என்னவென்பதை இந்த மூதாட்டியின் வாழ்க்கை புரிய வைக்கிறதல்லவா.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here