விமானநிலையத்தில் சிக்கிய காதல் ஜோடி!

நடிகர் ஆதியும், நடிகை நிக்கி கல்ராணியும் மரகதநாணயம் படத்தில் சேர்ந்து நடித்தனர். இந்த படம் சூப்பர் ஹிட்டானதால் இருவருக்கும் இடையேயான நட்பும், நெருக்கமும் அதிகமானது.

ஆதியின் தந்தை பிறந்தநாள் விழாவில் நிக்கி கலந்து கொண்டதை அடுத்து, இருவரும் காதலிப்பதாக கோலிவுட்டில் ஒரு பேச்சு இருந்து வந்தது. சமீபத்தில் இருவருக்கும் ஒரே சமயத்தில் கொரோனா தொற்று ஏற்பட்டது. கொரோனாவுக்கு எதிரான தங்களுடைய போராட்ட அனுபவத்தை இருவருமே பகிர்ந்திருந்தனர்.

இந்நிலையில் நிக்கியும், ஆதியும் விமான நிலையத்தில் பெட்டிகளை தள்ளிக்கொண்டு செல்லும் புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகியுள்ளன. இருவரும் ஒரு சிறிய விடுமுறைக்காக வெளியூர் செல்வதற்காக விமான நிலையம் சென்றதாக தகவல் வெளியாகியுள்ளது.

இது ஏற்கனவே இருந்து வந்த காதல் பேச்சை மெய்ப்பிக்கும் வகையில் அமைந்துள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here