இந்தியாவில் ஒரே நாளில் 90,600 கொரோனா தொற்றாளர்கள்!

இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 90,600 கொரோனா தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர். கடந்த 4 நாட்களில் முன்னோடியில்லாத வகையில் இந்தியாவில் அதிகரித்துள்ள தொற்றாளர்கள், இந்தியாவை கொரோனாவின் புதிய மையமாக மாற்றியுள்ளது.

கடந்த 10 நாட்களில் 10,000 இற்கும் அதிகமானவர்கள் உயிரிழந்துள்ளனர்.

தற்போது இந்தியாவில் 4,110,839 பேர் கொரோனா தொற்றுடன் அடையாளம் காணப்பட்டுள்ளனர். உயிரிழப்பு 70,679.

அமெரிக்கா மற்றும் பிரேசில் இரண்டையும் விட அதிக நாளாந்த தொற்றாளர்கள் தற்போது இந்தியாவிலேயே பதிவாகி வருகின்றனர். பிரேசிலின் தொற்றாளர்கள் எண்ணிக்கை 4,123,000. இன்றைய தினமே இந்த எண்ணிக்கையை இந்தியா கடந்து, அதிக தொற்றாளர்களில் அமெரிக்காவிற்கு அடுத்ததாக இடம்பெறுமென கருதப்படுகிறது. கடந்த சில தினங்களாக பிரேசில், அமெரிக்காவை விட இரண்டு மடங்கு தொற்றாளர்கள் இந்தியாவில் அடையாளம் காணப்படுகின்றனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here