நான் குடிகாரியா?- பாடகி பிரகதி விளக்கம்!

மதுவுக்கு அடிமையாகியுள்ளதாக வெளியான செய்திகளுக்கு பாடகி பிரகதி பதில் அளித்துள்ளார்.

சூப்பர் சிங்கர் தொலைக்காட்சியில் பங்கேற்று புகழ் பெற்றவர் பாடகி பிரகதி. 2012-ல் பாலா இயக்கிய பரதேசி படத்தில் இரு பாடல்கள் பாடி மேலும் கவனம் பெற்றார். சமீபத்தில் வெளியான ராட்சசன், கண்ணே கலைமானே படங்களிலும் பாடியுள்ளார்.

இந்நிலையில் பாடகி பிரகதி மதுவுக்கு அடிமையாகியுள்ளதாகச் செய்திகள் வெளியாகியுள்ளன. இதுகுறித்து ட்விட்டரில் பிரகதி பதில் அளித்ததாவது:

அயர்லாந்தில் உள்ள கின்னஸ் ஃபாக்டரிக்குச் சென்றபோது ஒரு பீர் கிளாஸுடன் புகைப்படம் எடுத்துக்கொண்டதை வைத்து நான் மதுவுக்கு அடிமையாகியுள்ளதாகச் செய்திகள் வெளியாகியுள்ளன. அதுபோன்ற செய்திகளை வெளியிட்டவர்கள் மீது சட்டபூர்வமான நடவடிக்கை எடுக்கச் சொல்கிறார்கள். ஆனால் அந்தளவுக்கு அவற்றுக்கு மதிப்பு கிடையாது. என்னுடைய, உங்களுடைய நேரத்தை வீணடிக்க வேண்டாம் என்று கூறியுள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here