மூத்த விடுதலைப் போராளி குட்டிமணியின் பாரியார் காலமானார்!

தமிழீழ விடுதலை இயக்கம்- ரெலோவின் ஸ்தாபகர்களில் ஒருவரான குட்டிமணி அவர்களின் பாரியார் திருமதி இராச ரூபராணி இயற்கை எய்திவிட்டார் என்ற துயர செய்தி அறிந்து நாம் வேதனையடைகின்றோம் என தமிழீழ விடுதலை இயக்கம் தெரிவித்துள்ளது.

தமிழீழ விடுதலை இயக்கத்தின் தலைவரும், பாராளுமன்ற உறுப்பினருமான செல்வம் அடைக்கலநாதன் இன்று சனிக்கிழமை விடுத்துள்ள இரங்கல் செய்தியில் மேலும் தெரிவிக்கையில்,

தமிழீழ விடுதலை இயக்கத்தின் ஸ்தாபகராக எமது இயக்கத்தின் முதுகெலும்பாக செயல் பட்டவர் குட்டிமணி.

அவரின் பாரியார் திருமதி இராச ரூபராணி அவர்கள் இயற்கை எய்திய துயர செய்தி அறிந்து நாம் வேதனையடைகின்றோம்

இவரது பிரிவால் துயருற்று இருக்கும் குடும்பத்தினருக்கு மற்றும் நண்பர்கள் அனைவருக்கும் தமிழ் ஈழ விடுதலை இயக்கம் ரெலோ உறுப்பினர்கள் சார்பாகவும் எமது ஆழ்ந்த இரங்கல்களையும் , கண்ணீர் அஞ்சலிகளையும் தெரிவித்துக் கொள்ளுகின்றோம் என குறித்த செய்தியில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளது.

வெலிக்கடை சிறைச்சாலையில் குட்டிமணி தங்கத்துரை கொல்லப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here