கிளிநொச்சி கரைச்சி பிரதேச சபையின் ஆளுகைக்குள் வரும் பொதுச் சந்தையின் விடயங்கள் தொடர்பில் ஆராய்வதற்க விசேட சபை அமர்வை கூட்டுமாறும் சமத்துவக் கட்சியின் உறுப்பினர் எழுத்து மூலம் கோரிக்கை விடுத்துள்ளனர்.
கடந்த 25-08-2020 அன்று சந்தையில் 38 மரக்கறிகடைகள் சட்டவிரோதமான சீல் வைக்கப்பட்ட சம்பவம் மற்றும் அதனால் வியாபாரிகளில் ஏற்பட்ட நெருக்கடி மற்றும் சந்தை வர்த்தகளின் நலன்கள் தொடர்பில் ஆராய்வதற்கு விசேட சபை அமர்வை கூட்டுமாறு சமத்துவக் கட்சி உறுப்பினர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
இது தொடர்பில் அவர்கள் தலைவர் மற்றும் செயலாளர்களுக்கு எழுத்து மூலம் கோரிக்கையினை 25-08-2020 அன்று அனுப்பி வைத்துள்ளனர்