முல்லைத்தீவிற்கு நன்றி சொல்லப் போன சாள்ஸ்!

வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் சாள்ஸ் நிர்மலநாதன் இன்று முல்லைத்தீவு மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளிலும் மக்கள் சந்திப்புக்களை நடாத்தி வருகின்றார்.

தேர்தலில் வாக்களித்த மக்களுக்கு நன்றி தெரிவிக்கும் முகமாக அவரது விஜயம் அமைந்திருந்தது.

அந்த வகையில் இன்று காலை முல்லைத்தீவு மாவட்டத்தின் புதுக்குடியிருப்பு பிரதேச செயலக பிரிவுக்குட்பட்ட இருட்டுமடு கிராமத்தில் மக்களை சந்தித்து நாடாளுமன்ற உறுப்பினர் நன்றி தெரிவித்ததோடு மக்களால் முன்வைக்கப்பட்ட பல்வேறு பிரச்சினைகள் தொடர்பில் கேட்டறிந்து கொண்டு அதற்கான நடவடிக்கைகள் எதிர்காலத்தில் முன்னெடுப்பேன் என உறுதியளித்திருந்தார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here