இன்று 485 பேர் வீடு திரும்புவர்!

தனிமைப்படுத்தல் மையங்களில் இருந்து இன்று (5) மேலும் 485 பேர் விடுவிக்கப்படவுள்ளனர்.

இதன்படி, தனிமைப்படுத்தலை நிறைவு செய்தவர்களின் எண்ணிக்கை 36,497 ஆக உயர்கிறது.

முப்படையினராலும் நிர்வகிக்கப்படும் 74 தனிமைப்படுத்தல் மையங்களில் தற்போது  8,330 பேர் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்.

இதேவேளை, வெளிநாடுகளில் சிக்கியிருந்த மேலுமொரு தொகுதியினர் இன்று நாடு திரும்பினர். அபுதாபியிலிருந்து 11 பேர், கட்டாரிலிருந்து 24 பேர், இந்தியாவிலிருந்து 8 பேர் நாடு திரும்பினர்.

இதேவேளை, இன்று மேலுமொரு தொகுதியினர் இந்தியாவிலிருந்து நாடு திரும்கவுள்ளனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here