இலங்கை இராணுவ அதிகாரியிடம் மன்னிப்பு கோரினார் யஸ்மின் சூக்கா!

இலங்கை இராணுவ அதிகாரியான பிரிகேடியர் ரவீந்திர டயஸிடம், உண்மைக்கும், நீதிக்குமான சர்வதேச செயற்திட்டத்தின் தலைவர் யஸ்மின் சூக்கா மன்னிப்பு கோரியுள்ளார்.

இராணுவப் புலனாய்வு பணிப்பாளரான மேஜர் ஜெனரல் சுரேஷ் சாலியின் புகைப்படத்திற்கு பதிலாக, ரவீந்திர டயஸின் புகைப்படத்தை பாவித்த விவகாரத்திலேயே இந்த மன்னிப்பு கோரப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

தனது புகைப்படத்தை தவறாக பயன்படுத்தியது தொடர்பில் பிரிகேடியர் ரவீந்திர டயஸ் தனது சட்டத்தரணி நிலங்க பெரேரா மூலம், 06/07/2020 திகதியிட்ட கடிதத்தை சூக்காவிற்கு அனுப்பியிருந்தார். தனது படத்தை தவறாக பயன்படுத்தியதாக அதில் குறிப்பிட்டு, நட்டஈட்டு கோரிக்கை முன்வைத்திருந்தார்.

தனது படத்தை தவறாக பயன்படுத்தியதன் மூலம், தனது வாழ்க்கைக்கு அச்சுறுத்தல் ஏற்படுத்தியதாக அதில் குறிப்பிட்டிருந்தார்.

தனக்கு 50 இட்சம் ரூபா இழப்பீடு வழங்க வேண்டுமென்றும் தெரிவித்திருந்தார்.

இந்த நிலையில், தனது சட்டத்தரணிகளின் ஆலோசனையின் பேரில், பிரிகேடியர் ரவீந்திர டயஸிடம், யஸ்மிக் சூக்கா கடிதம் மூலம் மன்னிப்பு கோரியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

விரைவில் இந்த கடிதத்தை சிங்கள் ஊடகங்கள் பிரசுரித்து, அதையே ஒரு வெற்றி நிகழ்வாக கொண்டாடலாமென எதிர்பார்க்கப்படுகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here