கனடாவில் பயங்கரம்: வீட்டுக்குள் நுழைந்து 4 பேரை கொன்றுவிட்டு தற்கொலை செய்த ஆயுததாரி!

கனடாவின் ஓஷாவா பகுதியில் உள்ள ஒரு வீட்டில் இன்று வெள்ளிக்கிழமை அதிகாலை நடந்த துப்பாக்கிச் சூட்டில் ஒரு குடும்பத்தை சேர்ந்தவர்கள் கொல்லப்பட்டுள்ளனர்.

துப்பாக்கிதாரி உட்பட ஐந்து பேர் கொல்லப்பட்டுள்ளனர். ஒருவர் காயத்துடன் மீட்கப்பட்டுள்ளார்.

அதிகாலை 1:20 மணியளவில் டர்ஹாம் பிராந்திய போலீசாருக்கு துப்பாக்கிச் சூடு பற்றிய தகவல் வழங்கப்பட்டது.

கிங் செயின்ட், பார்க்லேன் அவனியு, ஹார்மெனி வீதியில் உள்ள குடியிருப்பில் பல துப்பாக்கிச் சூட்டு சத்தங்கள் கேட்பதாக அறிவிக்கப்பட்டிருந்தது.

பொலிசார் துப்பாக்கிதாரி உள்ளிட்ட ஐந்து ஆண்களின் சடலங்களை மீட்டனர். கொல்லப்பட்ட குடும்ப உறுப்பினர்களில் இரண்டு பெரியவர்கள், இரண்டு 18 வயதிற்கு கீழ்ப்பட்ட ஆண்கள் உள்ளனர். 50 வயதான பெண் உயிராபத்தான நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

இந்த தாக்குதலில் சந்தேக நபர்களை தேடவில்லை என்றும், இறந்தவர்களில் ஒருவர் துப்பாக்கிதாரி என்றும் பொலிசார் நம்புகிறார்கள். வீட்டில் துப்பாக்கிச்சூடு நடத்தி விட்டு, அவர் தனக்குத்தானே சுட்டு தற்கொலை செய்துள்ளார். தாக்குதல்தாரி அந்த வீட்டில் வசிப்பவரல்ல என்றும் பொலிசார் தெரிவித்தனர்.

உயிரிழந்தவர்களின் அடையாளங்கள் வெளியிடப்படவில்லை, ஆனால் அவர்கள் அனைவரும் குடும்ப உறுப்பினர்கள் என்றும் வீட்டில் வசித்து வருவதாகவும் போலீசார் தெரிவித்தனர்.

சம்பவம் நடந்த வீட்டின் முன்பாக தவறான திசையில் நிறுத்தப்பட்டுள்ள பிக்கப் வாகனம் தாக்குதல்தாரியுடையது என பொலிசார் தெரிவித்தனர். அந்த வாகனத்தை, சம்பவம் நடந்த வீட்டின் முன்பாக இதற்கு முன் பார்த்ததில்லையென அயலவர்கள் தெரிவித்துள்ளனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here