மாத்தளை சிறுவர் இல்லத்திலிருந்து தப்பியோடிய 3 சிறுவர்கள் சிக்கினர்!

மாத்தளை பகுதியில் உள்ள ஒரு முன்னணி சிறுவர் காப்பகத்திலிருந்து தப்பியோடிய 3 சிறுவர்கள் இன்று (4) கட்டுகஸ்தோட்டை பொலிசாரிடம் ஒப்படைக்கப்பட்டனர்.

மாத்தளையில் அமைந்துள்ள இந்த சிறுவர் காப்பகம், நீதிமன்றங்கள் மற்றும் நன்னடத்தை மற்றும் குழந்தை பராமரிப்புத் துறையால் பரிசோதனையில் வைக்கப்படும் குழந்தைகளை கவனித்துக்கொள்கிறது.

இல்லத்தில் தங்க வைக்கப்பட்டிருந்த 12, 13 மற்றும் 16 வயதுடைய மூவர் நேற்று, இல்ல சுவரேறிக் குதித்து தப்பிச் சென்றுள்ளனர். அலவத்துகொட பகுதிக்கு சென்று, வீதியில் சென்ற ஒரு வாகனத்தை மறித்துள்ளனர். அவர்களை வாகனத்தில் ஏற்றிய சாரதி, அவர்கள் காப்பகத்திலிருந்து தப்பி வருவதை அறிந்து, அவர்களை கட்டகஸ்தோட்டை பொலிசாரிடம் ஒப்படைத்திருந்தார்.

பின்னர் சிறுவர் காப்பக நிர்வாகிகளை அழைத்து பொலிசார் விசாரணை நடத்தினர்.

மூவரும் கண்டி நீதிவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட உள்ளனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here