காதலித்து ஏமாற்றியவர் மீது அசிட் வீசிய பெண்!

காதலித்து ஏமாற்றிவிட்டு வேறொரு பெண்ணை திருமணம் செய்துகொண்ட காதலன் மீது பெண் ஒருவர் அசிட் வீசியுள்ளார்.

ஆந்திர மாநிலம் கர்னூல் மாவட்டம் பெத்தபள்ளி கிராமத்தைச் சேர்ந்த நாகேந்திரா – சுப்ரியா ஜோடி 3 ஆண்டுகளாகக் காதலித்து வந்துள்ளனர்.

இந்தக் காதலுக்கு எதிர்ப்பு தெரிவித்து வந்த நாகேந்திராவின் பெற்றோர், கடந்த மாதம் வேறொரு பெண்ணுடன் அவருக்குத் திருமணம் செய்து வைத்துள்ளனர்.

தகவல் தெரிந்து ஆத்திரமடைந்த சுப்ரியா, இன்று காலை இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்த நாகேந்திரா மீது அசிட்டை வீசியதாகக் கூறப்படுகிறது.

இதில் முகம், கை உள்ளிட்ட பகுதிகளில் படுகாயமடைந்த நாகேந்திரா, மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here