நியூசிலாந்தில்3 மாதங்களின் பின் கொரோனாவிற்கு முதல் பலி!

நியூசிலாந்தில் மூன்று மாதங்களுக்குப் பிறகு கொரோனா வைரஸுக்கு முதல் பலி ஏற்பட்டுள்ளது.

நியூசிலாந்தில் ஏற்பட்ட இரண்டாம் கட்டப் பரவல் காரணமாக ஏற்பட்ட தொற்றால் பாதிக்கப்பட்டு அவர் இறந்துள்ளார். இந்த இறப்பைச் சேர்த்து கொரோனா வைரஸுக்குப் பலியானவர்களின் எண்ணிக்கை 23 ஆக அதிகரித்துள்ளது.

கொரோனா பரவல் கட்டுப்படுத்தப்பட்ட காரணத்திற்காக நியூசிலாந்தில் உணவகங்கள், கேளிக்கை விடுதிகளில் மக்கள் கூட்டம் வழக்கம்போல் இருந்து வந்தது. இந்த நிலையில் நியூசிலாந்தில் 102 நாட்களுக்குப் பின்னர் ஒக்லாந்து நகரில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த நால்வருக்கு சில நாட்களுக்கு முன்னர் கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டது.

அதனைத் தொடர்ந்து அங்கு கொரோனா வைரஸ் பரவத் தொடங்கியுள்ளதைத் தொடர்ந்து, ஒக்லாந்தில் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. மேலும், மக்கள் பொதுவெளியில் சமூக இடைவெளியைப் பொறுப்புடன் பின்பற்ற வேண்டும் என்று வலியுறுத்தப்பட்டனர்.

நியூசிலாந்தில் 1,764 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். 1,500க்கும் அதிகமானவர்கள் குணமடைந்தனர். 23 பேர் பலியாகி உள்ளனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here