ஆழ்கடலில் தொடரும் போராட்டம்:எண்ணெய் கசிந்தால் இலங்கைக்கு பேரழிவு!

இலங்கையின் கிழக்குக் கடலில் தீப்பிடித்து எரியும் எம்டி நியூ டயமண்ட் கப்பல் மேலும் நகர்ந்து இலங்கை கரையை நெருங்கியுள்ளது. கங்கமன்கந்தையிலிருந்து 22 கடல் மைல் தொலைவில் கப்பல் உள்ளது என்று கடல்சார் பாதுகாப்பு அதிகாரசபையின் பொது மேலாளர் கலாநிதி டர்னி பிரதீப் குமார தெரிவித்தார்.

கப்பலில் சேமித்து வைக்கப்பட்டுள்ள கச்சா எண்ணெய் கடலில் கசிந்தால் அல்லது கப்பல் வெடித்தால், அது இலங்கையின் சுற்றுச்சூழல் அமைப்புக்கு கடுமையான சேதத்தை ஏற்படுத்தும் என்று அவர் மேலும் கூறினார்.

இதற்கிடையில், எம்டி நியூ டயமண்டின் தீயை அணைக்க உதவுவதற்காக மூன்று கப்பல்களும் இரண்டு விமானங்களும் சம்பவ இடத்திற்கு சென்றள்ளதாக இந்திய கடலோர காவல்படை ட்விட்டரில் தெரிவித்துள்ளது.

இந்திய கடலோர காவல்படையின் தகவலின்படி, கப்பலில் விரிசலைக் கண்டறிந்துள்ளது.

இன்று காலை கப்பலில் இரண்டு வெடிப்புகள் ஏற்பட்டுள்ளதாகவும், கப்பலின் டீசல் கொள்கலன் பகுதிக்கு தீ பரவினாலே கடுமையான விளைவை ஏற்படுத்தக்கூடும் என்றும் கடல்சார் பாதுகாப்பு அதிகாரசபை எச்சரித்துள்ளது.

கப்பலில் இருந்து எரிபொருள் கசிவு ஏற்பட்டால், ஹம்பாந்தோட்யைிலிருந்து யாழ்ப்பாணம் வரையிலான உணர்திறன் வாய்ந்த சுற்றுச்சூழல் அமைப்பைப் பாதுகாப்பதற்கான நடவடிக்கைகளில் ஒன்றாக, எரிபொருளை உறிஞ்சும் நடவடிக்கை மேற்கொள்ளப்படும், ஒரு நாடு எரிபொருள் கசிவைக் கட்டுப்படுத்துவது கடினம் என்பதால் தெற்காசிய பிராந்தியத்தில் உள்ள அனைத்து நாடுகளின் ஆதரவையும் பெறுவதற்கான ஆரம்ப நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

சுற்றுச்சூழல் அமைச்சின் அறிவுறுத்தலின் படி இந்த எரிபொருள் டேங்கரை வைத்திருக்கும் நிறுவனம் மீது சட்ட நடவடிக்கை எடுப்பது குறித்தும் ஆராயப்படுகிறது.

விமானப்படை இதுவரை 100,000 லீற்றர் நீரை தீயணைக்க பாவித்துள்ளது.

கிடைத்த தகவல்களின்படி, கப்பலில் இருந்து எரிபொருளை அகற்ற மேலதிக கப்பல் ஏற்கனவே அந்த இடத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here