கனடா படகு விபத்தில் தமிழர் பலி!

கனடாவில் நிகழ்ந்த படகு விபத்தில் தமிழர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

நேற்று (3) வியாழக்கிழமை பிற்பகல் வூட்பைன் கடற்கரையில் படகு ஒன்று பாறைகளுடன் மோதியதில் இ்த விபத்து நிகழ்ந்தது. மேலும் 6 பேர் காயமடைந்தனர்.

மதியம் 12:35 மணியளவில் டொராண்டோ பொலிசாருக்கு இது குறித்த அவசர அழைப்பு சென்றது. கரையிலிருந்து 75 மீட்டர் தொலைவில் ஒரு படகு விபத்துக்குள்ளானது.

சம்பவ இடத்தில் மூன்று பேர் சிகிச்சை பெற்றனர், நான்கு பேர் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர், அங்கு ஒருவர் இறந்தார் என்று பொலிசார் தெரிவித்தனர்.

கடற்கரையில் பொழுதை கழித்துக் கொண்டிருந்தவர்கள், வாடகை படகில் சவாரி செய்தபோது இந்த விபத்து நேர்ந்தது. படகு அதிவேகமாக பயணித்து, கட்டுப்பாட்டை இழந்து விபத்திற்குள்ளானது.

விபத்தில் இலங்கைக்கோன் பல்லவநம்பி என்பவர் உயிரிழந்தார். விபத்தில் காயமடைந்தவர்களில் மேலும் தமிழர்கள் உள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here