சர்ச்சைக்குரிய பேஸ்புக் குரூப்பை நடத்திய பொலிஸ்காரர் கைது!

சர்ச்சைக்குரிய பேஸ்புக் குரூப்பை பராமரித்த குற்றச்சாட்டில் பொலிஸ் உத்தியோகத்தர் ஒருவரை குற்றவியல் புலனாய்வுத் துறை (சிஐடி) கைது செய்துள்ளது.

தாய்மாரை அவதூறு செய்யும் அம்மலட ஆச கொல்லோ என்ற பேஸ்புக் பக்கத்தையே இவர் பராமரித்து வந்தார்.

பொதுமக்கள் சமூக ஊடகங்களில் கடும் அதிருப்தி தெரிவித்ததை தொடர்ந்து சிஐடியின் சமூக ஊடக குற்ற புலனாய்வு பிரிவு விசாரணைக நடத்தி, 27 வயது சந்தேக நபர்ரை கைது செய்துள்ளது.

அந்த நபர் ஒரு பயிற்சி பொலிஸ் கான்ஸ்டபிள் என்றும் ஒரு வருடத்திற்கு முன்னர் ஆட்சேர்ப்பு செய்யப்பட்டதாகவும் பொலிசார் தெரிவித்தனர்.

சந்தேக நபர் கைது செய்யப்பட்ட நேரத்தில் கம்பஹா பொலிஸ் தலைமையகத்தில் பணியாற்றி வந்தார்.

அந்த பேஸ்புக் பக்கத்தில் 600 நபர்கள் அங்கம் வகித்திருந்தனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here