வின்சன்ற் மகளிர் பாடசாலையின் பெண்கள் சாரணிய மாணவிகளுக்கான பாசறை

மட்டக்களப்பு வின்சன்ற் மகளிர் உயர்தர தேசிய பாடசாலையின் பெண்கள் சாரணிய மாணவிகளுக்கான பாசறையானது சத்துருக்கொண்டானில் அமைந்துள்ள சர்வோதய நிலையத்தில் நடைபெற்றது.

இப்பாசறை நிகழ்வில் முகாம் உரிமம் பெற்ற வளவாளராக கிறிஸ்ணி அமரதிலக பங்காற்றியதுடன், ஏனைய வளவாளர்களாக கிழக்கு மாகாண பிரதி ஆணையாளர் செல்வி.தங்கராசா பாரிசாதமலர், வலய ஆணையாளர் திருமதி.தேவகி லோகநாயகம், மட்டக்களப்பு தேசிய கல்விக் கல்லூரி விரிவுரையாளரும் பெண்சாரணிய பயிற்றுவிப்பாளருமாகிய திருமதி.டிலாந்தி மோகனக்குமார் மற்றும் பெண் சாரணிய பொறுப்பாசிரியர்களும் கலந்து கொண்டனர்.

இதன்போது பாசறை தீ நிகழ்வில் பாடசாலை அதிபர் திருமதி.தவத்திருமகள் உதயகுமார் கலந்து சிறப்பித்ததுடன், சாரணிய மாணவிகளுக்கான நான்கு நாட்களை கொண்ட பயிற்சி நெறிகள் என்பன கலந்து கொண்ட வளவாளர்களால் இடம்பெற்றது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here