தேங்காய்க்குள் ஹெரோயின் கடத்திய இளம்ஜோடி: எப்படி சிக்கியது?

தெற்கு அதிவேக நெடுஞ்சாலையில் தேங்காய்களிற்குள் மறைத்து ஹெரோயின் கடத்திய குழு பொலிசாரால் கைது செய்யப்பட்டுள்ளனர். 500,000 ரூபா மதிப்புள்ள ஹெராயினுடன் இளம் ஜோடி உள்ளிட்ட ஐந்து பேர் மொரகஹேன பொலிசார் நேற்று (3) கைது செய்தனர்.

மோராகஹேன போலீஸ் OIC எஸ்.கே.நலின் சஞ்சீவவுக்கு கிடைத்த தகவலின் அடிப்படையில் இந்த நடவடிக்கையெடுக்கப்பட்டது.

தெற்கு அதிவேக நெடுஞ்சாலையில் பொது போக்குவரத்தைப் பயன்படுத்தி காலி அதி வேகப்பாதையிலிருந்து வெண்ணப்புவ, சிலாபம் மற்றும் புத்தளம் பகுதிகளுக்கு இவர்கள் ஹெரோயின் கடத்தி வருவது விசாரணையில் தெரிய வந்துள்ளது.

தற்போது களுத்துறை சிறையில் அடைக்கப்பட்டுள்ள முன்னணி ஹெரோயின் கடத்தல்காரர் சுனில் சாந்த என்பவரின் குழுவை சேர்ந்தவர்கள் என அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

உடுவால் வசிக்கும் ஒருவரிடமிருந்து பெற்றிருந்தது.

இதன்படி, தற்போது சிறையில் இருக்கும் சுனில் சாந்த தங்கியிருந்த வீட்டில் தங்க வந்த அனாமதேய நபர்கள் இருவரை பொலிசார் கைது செய்துள்ளனர்.

அவர்களிடம் பல ஹெரோயின் பாக்கெட்டுகள் இருப்பதைக் கண்டுபிடித்த பொலிசார் இருவரையும் விசாரித்தனர்.

இதன்மூலம் அதிவேக நெடுஞ்சாலையில் ஹெரோயின் கடத்தப்படுவது தெரியவந்தது.

அதன்படி, அதிவேக நெடுஞ்சாலையில் பயணித்த பேருந்தில் ஹெரோயின் வாங்க வந்த ஒருவரை பொலிசார் கைது செய்து, அந்த நபருக்கு கொடுக்க ஹெரோயின் கொண்டு வந்த தம்பதியரை கைது செய்தனர்.

தம்பதியினர் தங்களுடன் கொண்டு வந்த ஐந்து தேங்காய்களில் 500 பாக்கெட் ஹெரோயின் கண்டுபிடிக்கப்பட்டது.

சந்தேக நபர்கள் விசாரணையின் பின்னர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட உள்ளனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here