காலடி எடுத்து வைத்தால் சிறையில் அடைப்பேன்: 1000 ஏக்கர் காணிக்குள் நுழைய தமிழர்களிற்கு தடைவிதித்து பிக்கு மிரட்டல்!

திருகோணமலை குச்சவெளி பிரதேச செயலாளர் பிரிவில் உள்ள திரியாய் கிராமத்தில் தமிழ் மக்கள் பரம்பரையாக விவசாயம் செய்துவரும் ஆயிரம் ஏக்கர் காணிக்குள் செல்ல கிழக்கு தொல்பொருள் செயலணி உறுப்பினரான பிக்கு ஒருவர் தடைவிதித்துள்ளார்.

ஆத்திக்காடு, நீராவிக்கண்டல், பள்ளப்பாவக்கை, பட்டாணிபாதி, பாவலங்கண்டல், கந்தப்பன் வயல் ஆகிய வயல் காணிகள் தொல்பொருள் சார்ந்த இடங்கள் என்பதாக கூறி, இந்தமுறை பெரும் போகச் செய்கைக்கு மேற்படி வயல்காரர்கள் இறங்கக்கூடாது, மீறி இறங்கினால் அனைவரையும் கூண்டோடு சிறையில் அடைப்பேன் என அரிசிமலை பிக்கு கூட்டம் போட்டு, தமிழ் மக்களை மிரட்டியுள்ளார்.

ஜனாதிபதியினால் நிறுவப்பட்டுள்ள தனிச்சிங்கள கிழக்கு தொல்பொருள் செயலணியின் உறுப்பினராவார்.

பிக்குவின் மிரட்டலால் அச்சமடைந்துள்ள வயல் காணிக்காரர்கள், தமது காணிகளிற்குள் நுழையில்லை.

விவசாயிகள் வயல் செய்கையில் ஈடுபடுவதை யாரும் தடைவிதிக்கக்கூடாது என திருகோணமலை மாவட்ட எம்.பி, இரா.சம்பந்தன் நேற்று முன்தினம் திருகோணமலை மாவட்ட அரசாங்க அதிபரை சந்தித்து வேண்டுகோள் விடுத்தார்.

இதையடுத்து குச்சவெளி பிரதேச செயலாளர் பிரிவில் அனைத்து தரப்பினரையும் உள்ளடக்கியதாக கலந்துரையாடல் ஒன்றை நடத்துவதாக திருமலை அரசாங்க அதிபர் தெரிவித்துள்ளார்.

இந்த விவகாரத்தில் தமிழ் மக்களிற்கு நீதி கிடைக்காவிட்டால் நீதிமன்றத்தை நாடும் முஸ்தீபில் தமிழ் தேசிய கூட்டமைப்பு ஈடுபட்டுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here