இறால் பண்ணைக்காக சிலாபத்திலும் சதுப்பு நிலங்கள் அழிப்பு!

புத்தளம் பகுதியில் இறால் வளர்ப்பிற்காக சதுப்பு நிலத்தை சட்டவிரோதமாக அழித்த விவகாரம் அண்மையில் சர்ச்சையை ஏற்படுத்தியிருந்த நிலையில், மேலும் ஒரு சட்டவிரோத இறால் பண்ணை பற்றிய தகவல் வெளியாகியுள்ளது.

சிலாபம், அம்படஹடவில பகுதியில் வெலிஹேன நீரேரி பகுதியில் சதுப்பு நிலங்களை வெட்டி, சட்டவிரோதமாக இறால் பண்ணை அமைக்கும் முயற்சிகள் பற்றிய தகவல்கள் வெளியாகியுள்ளது.

பெரமுன தரப்பிற்காக தீவிர தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்ட பிரதேசத்தின் முக்கியஸ்தர்கள் குழுவொன்றே இந்த இறால் பண்ணையை அமைப்பதாக பிரதேசவாசிகள் குற்றம்சாட்டியுள்ளனர்.

பகலில் சதுப்பு நிலங்கள் அழிக்கப்படவில்லை என்றாலும், அவை இரவிலும் பொது விடுமுறை நாட்களிலும் தடையின்றி அழிக்கப்படுவதாக கூறப்படுகிறது. இதை எதிர்ப்பவர்களுக்கு அச்சுறுத்தல்கள் விடுக்கப்படுவதாக கிராம மக்கள் சுட்டிக்காட்டுகின்றனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here