கொட்டகலை இராணுவ முகாம்: இராணுவ உயரதிகாரிகளை ஹட்டன் நீதிமன்றத்தில் முன்னிலையாக உத்தரவு!

நபரொருவரின் பாவனைக்காக பெறப்பட்ட காணியில் தனிமைப்படுத்தல் மையத்தை அமைத்த விவகாரத்தில், இராணுவ உயரதிகாரிகளை நீதிமன்றத்தில் முன்னிலையாகுமாறு ஹட்டன் நீதிவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

எதிர்வரும் 15 ஆம் திகதி ஆஜராகும்படி மேஜர் ஜெனரல் பிரியங்க பெரேரா, இரண்டு கேணல்கள் மற்றும் நகர அபிவிருத்தி அதிகாரசபையினரை நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

கொழும்பு வணிக உயர்நீதிமன்றத்துடனான ஒப்பந்தத்தின்படி நபரொருவர் 50 வருட குத்தகைக்கு பெற்ற நிலத்தை தனிமைப்படுத்தல் மையத்திற்கென இராணுவம் வலுக்கட்டாயமாக பெற்று, கட்டடங்கள் அமைத்து, இராணுவ முகாமாக மாற்றியுள்ளதாக முறைப்பாட்டில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஹட்டன்- நுவரெலியா வீதியில் கொட்டகலை பகுதியில் இந்த தனிமைப்படுத்தல் மையம் அமைக்கப்பட்டுள்ளது.

முறைப்பாட்டாளர் சார்பில் ஜனாதிபதி சட்டத்தரணி மைத்திரி குணரத்ன முன்னிலையாகியிருந்தார்.

அந்த நிலத்தை திருப்பித்தருமாறு முறைப்பாட்டாளர் கோரியுள்ளார்.

இந்த மனுவை நேற்று பரிசீலித்த ஹட்டன் மாவட்ட நீதிபதி ஜே.ட்ரொஸ்கி இந்த உத்தவை பிறப்பித்தார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here