அச்சுவேலியில் அதிகூடிய மழைவீழ்ச்சி!

தற்போது வளி மண்டல கீழ் வளிமண்டலத்தில் ஏற்பட்ட தளம்பல் காரணமாக தற்போது ஏற்பட்டுள்ள மழைவீழ்ச்சி மேலும் 18 மாணித்தியாலங்களுக்கு தொடரலாம் என வளிமண்டல திணைக்களத்தினால் எதிர்பார்க்கப்படுகிறது.

யாழில் கடந்த இரண்டு நாட்கள் மட்டும் 90.8 மில்லி மீற்றர் மழை வீழ்ச்சி பதிவாகியுள்ளது. நேற்று காலை 8.30 மணியிலிருந்து இன்று 8.30 மணி வரை 55.4 மில்லி மீற்றர் மழை வீழ்ச்சி பதிவாகியுள்ளதாக யாழ்ப்பாண மாவட்ட அனர்த்த முகாமைத்துவ பிரிவு உதவி பணிப்பாளர் சூரியராஜ் தெரிவித்தார்.

இன்று காலை 8.30 மணியிலிருந்து மாலை 2 30 மணி வரையில் 22.7 மழைவீழ்ச்சி பதிவாகியுள்ளது.

கடந்த இரண்டு நாளில் அச்சுவேலிப் பகுதியில் அதிகூடிய மழைவீழ்ச்சி பதிவாகியுள்ளது. 92.9மில்லிமீற்றர் மழைவீழ்ச்சி பதிவானது. அதேபோல தெல்லிப்பழை பிரதேசத்தில் 84.4மில்லி மீற்றர் மழைவீழ்ச்சி பதிவாகியுள்ளது.

இந்த வருடம் கடந்த ஜனவரி மாதத்தில் இருந்து இன்று வரை யாழ்ப்பாண மாவட்டத்தில் 343.9 மில்லிமீற்றர் மழைவீழ்ச்சி பதிவாகியுள்ளது.

நாட்டைச் சூழவுள்ள கடற் பகுதிகளில் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யலாம் என அறிவுறுத்தல் வழங்கப்பட்டுள்ளது. வடக்கு பகுதியில் கடற் தொழிலில் ஈடுபடுவோர் மிக அவதானமாக செயற்படுமாறு வளிமண்டலவியல் திணைக்களத்தினால் அறிவிக்கப்பட்டுள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here