விபத்தில் பெண்ணின் உடல் முழுவதும் புகுந்த இரும்பு கம்பி அகற்றப்பட்டது!

சீனாவில் கட்டுமானப்பணியின்போது 10 அடி உயரத்திலிருந்து தவறி விழுந்த ஒரு பெண்ணின் உடலுக்குள் நுழைந்த கம்பி வெற்றிகரமாக அகற்றப்பட்டுள்ளது.

கீழேவிழுந்து, கம்பியில் சிக்கி தொங்கிக்கொண்டிருந்த சியாங் என்ற அந்த பெண்ணை, கம்பியை அறுத்து மருத்துவமனைக்கு கொண்டு சேர்த்தார்கள் உடன் வேலை செய்தவர்கள்.

அந்த கம்பி சியாங்கின் பின்புறம் வழியாக நுழைந்து, அவரது தோள் வழியாக வெளியே நீட்டிக்கொண்டிருந்தது. அவரை ஸ்கான் செய்த மருத்துவர்கள், அந்த கம்பி உடலின் முழு நீளத்தையும் ஆக்கிரமித்திருந்தாலும், அவரது முக்கிய உள்ளுறுப்புகளோ, முக்கிய இரத்தக்குழாய்களோ பாதிக்கப்படாமலிருப்பதைக் கண்டு வியந்தார்கள்.

உடனே அறுவை சிகிச்சையை ஆரம்பித்த மருத்துவர்கள் அந்த கம்பியை அகற்றுவதற்கு மூன்று மணி நேரம் போராட வேண்டியிருந்தது.

வெற்றிகரமாக மருத்துவர்கள் அந்த கம்பியை அகற்றிய நிலையில், தற்போது சியாங்கின் நிலைமை சீராக இருப்பதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளார்கள்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here