வாகரை பிரதேச செயலகத்தில் பட்டதாரிகளிற்கு நியமனம்!

வாகரை பிரதேச பட்டதாரிகளுக்கான நியமனக் கடிதங்களை வாகரை பிரதேச செயலாளர் சுப்பிரமணியம் ஹரனினால் இன்று வழங்கி வைக்கப்பட்டது.

வாகரை பிரதேசத்தின் புணானை கிழக்கு, வாகரை, பால்சேனை,கதிரவெளி, புச்சாக்கேனி மற்றும் ஊரியன் கட்டு போன்ற கிராமங்களை சேர்ந்த பட்டாரிகள் நியமனத்தை பெற்றனர்.

மட்டக்களப்பு மாவட்டத்தில் 14 பிரதேச செயலகங்களில் 2089 வேலையற்ற பட்டதாரிகள் இணைப்பு செய்யும் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.

உள்ளக பாதுகாப்பு உள்நாட்டு அலுவல்கள் அனர்த்த முகாமைத்துவ அமைச்சினால் இனையதளத்தில் வெளியிடப்பட்ட பெயர் விபரங்களின் அடிப்படையில் இவ் நியமனங்கள் இடம்பெற்றன.

நியமனங்கள் வழங்கப்பட்ட பட்டதாரிகள் தலைமைத்துவம் பயிற்சி, முகாமைத்துவம் தொடர்பான பயிற்சிகள் மக்கள் தொடர்பாடல் பயிற்சிகள் மற்றும் அரசாங்க திணைக்களங்களின் கட்டமைப்பு தொடர்பான பயிற்சிகள் பெற்ற பின்னர் அரச திணைக்களுக்கு இணைப்பு செய்யப்படுவர் என மாவட்ட அரசாங்க அதிபர் திருமதி கலாமதி பத்மராஜா தெரிவித்துள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here