யாழில் கள்ளமண் ஏற்றிய வாகனம் சிக்கியது!

அனுமதிப்பத்திரமின்றி யாழ்ப்பாணத்தில் இருந்து மணல் ஏற்றி வந்த என்ற வாகனத்தினை தாம் கைப்பற்றியுள்ளதாக ஊர்காவற்றுறை பொலிஸார் தெரிவித்தனர். இந்த சம்பவம் இன்று காலை இடம்பெற்றுள்ளது.

மண்டைதீவு பகுதியில் காவல் கடமையில் ஈடுபட்டிருந்த போலீசார் சந்தேகத்துக்கிடமான முறையில் வந்த ஹன்ரர் வாகனத்தை மறித்து சோதனை மேற்கொண்டனர்

இதன்போது அனுமதிப்பத்திரமின்றி மணல் ஏற்றி வந்தமை கண்டுபிடிக்கப்பட்டது.

கைது செய்யப்பட்ட சாரதியினை ஊர்காவற்துறை நீதவான் நீதிமன்றத்தில் முற்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here