மின்னல் தாக்கி மீனவர் காயம்!

கடலில் ஏற்பட்ட மின்னல் தாக்கம் காரணமாக மீன்பிடிக்கச் சென்ற படகு சேதமடைந்ததுடன் மீனவர் ஒருவருக்கு சிறு எரிகாயம் ஏற்பட்டுள்ளது.

தேற்றாத்தீவு இருந்து இருவருடன் கடலுக்கு மீன்பிடிக்கச் சென்ற படகே இவ்வாறு தாக்கத்திற்குள்ளாகியுள்ளது.

மேற்படி சம்வம் தொடர்பாக மீனவர்கள் கருத்து தெரிவிக்கையில்,

வழமையாக கடலுக்கு செல்வதற்காக மாலை ஆறு மணியளவில் புறப்பட்டு சென்றோம். இந் நிலையில் சுமார் ஒன்பது மணியளவில் மழைபெய்தது. அதனைத் தொடர்ந்து மின்னல் ஏற்றபட்டது. ஏற்பட்ட மின்னலானது படகில் பொருத்தப்பட்டிருந்த மின்குமிழில் தாக்கம் புரிந்த காரணத்தால் இம்மின்னல் தாக்கம் ஏற்பட்டது. இதனையடுத்து படகில் வெடிப்புக்கள் ஏற்பட்டதுடன், ஒருவருக்கு சிறிய எரிகாயமும் ஏற்பட்டது. இதனால் நாங்கள் செய்வதறியாது கரையை நோக்கி புறப்பட்டு வந்தோம் என்றனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here