மாணவர்களிற்கு அதிபர் முடிவெட்டியதன் எதிரொலி: கிராமத்திற்கே விடிவு!

கல்குடா கல்வி வலயத்திற்குட்பட்ட கட்டுமுறிவுக்குளம் அரசினர் தமிழ் கலவன் பாடசாலையில் கல்வி பயிலும் மாணவர்களின் கஷ்ட நிலைமையினை கருத்தில் கொண்டு தன்வந்திரி மக்கள் முற்போக்கு அபிவிருத்திச் சங்கத்தினரால் மாத்தில் இரு தடவை சிகை அலங்காரம் செய்வதற்கு முன்வந்துள்ளதாக பாடசாலை அதிபர் ஜே.ஜீவனேஸ்வரன் தெரிவித்தார்.

கட்டுமுறிவுக்குளம் அரசினர் தமிழ் கலவன் பாடசாலை மாணவர்களதும், கட்டுமுறிவுக்குள மக்களது நலன் கருதியும் எதிர்நோக்கிய பிரச்சனையை தீர்க்கும் முகமாக தன்வந்திரி மக்கள் முற்போக்கு அபிவிருத்திச் சங்கத்தினர் பாடசாலை அதிபருடன் கலந்தாலோசித்து மாதத்தில் இரு தடவைகள் (முதல் செவ்வாய் இறுதி செவ்வாய்) கிராமத்திற்கு வருகை தந்து மாணவர்களுக்கு இலவசமாகவும், ஏனைய பொது மக்களுக்கு கட்டணம் பெற்றும் சிகை அலங்காரம் செய்வதற்கு முன்வந்துள்ளனர்.

தன்நலம் கருதாது எமது மாணவர்களுக்கு சேவை செய்ய முன்வந்த தன்வந்தரி மக்கள் முற்போக்கு அபிவிருத்தி சங்கத்தினருக்கு பாடசாலை சார்பாகவும் கிராம மக்கள் சார்பாகவும் நன்றியினையும், வாழ்த்துகளையும் தெரிவித்துக் கொள்வதாக பாடசாலை அதிபர் ஜே.ஜீவனேஸ்வரன் தெரிவித்தார்.

அண்மையில் பாடசாலை அதிபர் ஜே.ஜீவனேஸ்வரன் தமது பாடசாலை மாணவர்கள் ஒரு வார காலமாக பாடசாலைக்கு வரவில்லை என்பதால் வீடு தேடிச் சென்று காரணம் கேட்ட போது முடி வெட்டவில்லை. அதனால் பாடசாலைக்கு வரவில்லை.

அத்தோடு முடி வெட்டுவதானால் 20 கிலோ மீற்றர் தொலைவில் இருக்கும் கதிரவெளி கிராமத்திலுள்ள சலூன் கடைக்குப் போக வேண்டும். அதற்கு வசதியுமில்லை என்று மாணவர்கள் கூறினார்கள்.

பாடசாலை வருவதற்கு தலை முடி ஒரு தடையாக இருக்கக் கூடாதென எண்ணிய அதிபர் தமது கடமைக்கு அப்பால் முடிவெட்டுபவராக மாறிய சம்பவம் பல்வேறு ஊடகங்களில் வெளிவந்தமையிட்டு, குறித்த சங்கத்தினார் இந்த நடவடிக்கை இடம்பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here