மாற்றுத்திறனாளிக்கு வியாபார வாகனம்!

சுயதொழிலில் ஈடுபட்டு வரும் கல்முனை வலது குறைந்தோர் மறுமலர்ச்சி சங்க உப தலைவரும் மாற்றுத்திறனாளியுமான எம்.ஐ. அஷ்ரப் அவர்களுக்கு சிறு வியாபாரம் செய்ய உறுதுணையாக “வியாபார வாகனம்” ஒன்றை வழங்கும் நிகழ்வு நேற்று (01) செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

சிறு வியாபாரம் செய்ய உறுதுணையாக “வியாபார வாகனம்” ஒன்றை பெற்றுக்கொள்வதற்காக பல முயற்சிகளை மேற்கொண்டார். இந்த கோரிக்கையை கல்முனை பிராந்திய முகநூல் தொலைக்காட்சியான தாருஸபா மக்கள் மயப்படுத்தியதும் பிரபல சமூக சேவையாளர் தேசமானிய ஏ.வீ. ஜௌபர் மற்றும் தனியார் பஸ் நிலைய பொறுப்பதிகாரி எம்.எச்.அப்துல் கரீம் ஆகியோரின் ஆலோசனை வழிகாட்டலின் கீழ் கல்முனை ஸக்காத் நிதியம் மூலம் வழங்கிய 50,000 ரூபாய் பண உதவியுடன் கல்முனை பிரதேச தனவந்தர்கள் சிலரின் பங்களிப்புடன் “வியாபார வாகனம்” தயார் செய்யப்பட்டு நேற்று (01) செவ்வாய்க்கிழமை பயனாளிக்கு கையளிக்கப்பட்டது.

இந்நிகழ்வில் தாருஸபா அமைய பிரதானி உஸ்தாத் சபா முஹம்மத், தாருஸபா அமைய ஆலோசகர் ஏ.எல்.எம். ஹனீபா சமூக சேவையாளர் ஏ.வீ. ஜௌபர் மற்றும் தனியார் பஸ் நிலைய பொறுப்பதிகாரி எம்.எச்.அப்துல் கரீம் உட்பட பலரும் கலந்துகொண்டு சிறப்பித்தனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here