70 நாட்கள், 18 நாடுகளின் ஊடாக பயணம்: பிரித்தானியாவில் இருந்து இந்தியாவிற்கு புறப்படும் பேருந்து!

பிரித்தானியாவிற்கும் இந்தியாவிற்குமிடையிலான பஸ் சாகசப் பயணமொன்று ஆரம்பிக்கப்படவுள்ளது.

பிரித்தானியாவிலிருந்து தரை வழியாக 18 நாடுகளை ஊடறுத்து, 70 நாள் பயணத்தின் மூலம் இந்தியாவை வந்தடைய திட்டமிடப்பட்டுள்ளது. இதில் பயணம் செய்ய விரும்புபவர்கள் விண்ணப்பிக்கலாமென அறிவிக்கப்பட்டுள்ளது.

உலகின் முக்கிய- வரலாற்று சிறப்பு மிக்க இடங்களின் ஊடாக இந்த பஸ் பயணம் இடம்பெறும். மொஸ்கோ, வில்னியஸ், ப்ராக், பிரஸ்ஸல்ஸ் மற்றும் பிராங்பேர்ட் உள்ளிட்ட ஐரோப்பிய முக்கிய நகரங்கள், உஸ்பெகிஸ்தானில் உள்ள பண்டைய நகரங்களான தாஷ்கண்ட் மற்றும் சமர்கண்ட் ஆகிய பிரதேசங்களின் ஊடாக பயணம் இடம்பெறும்..

கோபி பாலைவனம், சீன பெருஞ்சுவர் ஆகியவற்றை பார்வையிட்டு, பின்னர் பட்டுப் பாதை வழியாகப் பயணிக்கும்.

புதுதில்லியில் இறுதி நிறுத்தத்தை மேற்கொள்வதற்கு முன், பயணிகள் மியான்மரின் முக்கிய சுற்றுலா தலங்களை பார்வையிடலாம்.

ஜூலை 2021 இல் பேருந்து பயணம் தொடங்கப்படும் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில், தற்போது கொரோனா தொற்றின் எதிர்காலத்தை தீர்மானிக்க முடியாமலுள்ள நிலையில், புறப்படும் திகதி எதுவும் இதுவரை உறுதிப்படுத்தப்படவில்லை.

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here