மூத்த தலைவர் வி.தர்மலிங்கத்தின் நினைவுநாள்!

இலங்கை தமிழ் அரசு கட்சியின் மூத்த தலைவர், முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் தர்மலிங்கம் அவர்களின் முப்பத்தி ஐந்தாம் ஆண்டு நினைவு தினம் யாழ்ப்பாணம் தாவடி பகுதியில் உள்ள அவரது நினைவிடத்தில் இன்று (2) காலை இடம்பெற்றது.

இந்த நினைவு தினம் மறைந்த தர்மலிங்கம் அவர்களின் மகனான பாராளுமன்ற உறுப்பினர் த.சித்தார்த்தன் தலைமையில் இடம்பெற்றது.

இந்நிகழ்வில் மறைந்த தர்மலிங்கம் அவர்களின் நினைவிடத்தில் மலர் மாலை அணிவித்து, மலர் தூவி அஞ்சலி செலுத்தப்பட்டது.

இந்த அஞ்சலி நிகழ்வில் யாழ்ப்பாண பல்கலைக்கழக துணவேந்தர் சிறி சற்குணராஜா, முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் மாவை சேனாதிராஜா, வடக்கு மாகாண அவைத் தலைவர் சீ.வீ.கே.சிவஞானம், உள்ளூராட்சி சபை உறுப்பினர்கள், கூட்டமைப்பின் ஆதரவாளர்கள் கலந்து கொண்டனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here