3 நாளில் 100 கொரோனா தொற்றாளர்கள்!

நாட்டில் நேற்று (1) 43 பேர் கொரோனா தொற்றுடன் அடையாளம் காணப்பட்டனர். இதன்படி மொத்த தொற்றாளர்களின் எண்ணிக்கை 3,092 ஆக அதிகரித்துள்ளது.

தற்போது சிகிச்சை பெற்று வருபவர்களின் எண்ணிக்கை 201 ஆக உயர்ந்தது.

கட்டாரிலிருந்து நாடு திரும்பிய 26 பேர், இந்தியாவிலிருந்து வந்த இந்தியர், இந்தியாவிலிருந்து நாடு திரும்பிய 3 பேர், குவைத்திலிருந்து நாடு திரும்பிய 6 பேர், மாலைதீவிலிருந்து நாடு திரும்பிய 6 பேர், ஐக்கிய அரபு இராச்சியத்திலிருந்து நாடு திரும்பியவர் ஆகியோர் தொற்றுடன் அடையாளம் காணப்பட்டனர்.

நேற்று செவ்வாய்க்கிழமை 43 பேரும், நேற்று முன்தினம் திங்கட்கிழமை 37 பேரும், கடந்த ஞாயிற்றுக்கிழமை 17 பேரும் தொற்றுடன் அடையாளம் காணப்பட்டனர். இதன்படி கடந்த 3 நாட்களில் 100 பேர் (வெளிநாடுகளிலிருந்து நாடு திரும்பியவர்கள்) கொரோனா தொற்றுடன் அடையாளம் காணப்பட்டனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here