சொகுசு பஸ் மோதி இளைஞர்கள் இருவர் பலி: பொதுமக்களால் பஸ் சேதம்!

மட்டக்களப்பு மாவட்டத்தில் மண்முனைப்பற்று பிரதேச செயலர் பிரிவிட்குட்பட்ட தாழங்குடாவில் நேற்றிரவு இடம்பெற்ற விபத்தில் இரண்டு இளைஞர்கள் பலியாகினர்.

இரவு 9:45 மணியளவில் அக்கரைப்பற்று பகுதியிலிருந்து கொழும்பு நோக்கி பயணித்த சொகுசு பஸ் ஒன்று காத்தான்குடியை அண்மித்த தாழங்குடா பகுதியில் மோட்டார் சைக்கிளில் சென்ற இரு இளைஞர்கள் மீது மோதி விபத்துக்குள்ளானதில் சம்பவ இடத்தில் இளைஞர்கள் இருவரும் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர்.

புதுக்குடியிருப்பு கந்தசுவாமி ஆலய வீதியை சேர்ந்த துலக்சன் (24), நிலுக்சன் (20) ஆகிய இருவரமே உயிரிழந்தனர்.

இந்த சம்பவத்தை தொடர்ந்து ஆத்திரமுற்ற அப்பகுதி பொதுமக்களினால் குறித்த பஸ் மீது தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளது, இதனால் பஸ் கடுமையான சேதங்களுக்கு உள்ளாகியுள்ளது.

சாரதி மற்றும் உதவியாளர் இருவரும் தப்பி சென்றுள்ள நிலையில் பொலிசார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here