இன்று 32 பேருக்கு கொரோனா!

நாட்டில் இன்று 32 பேர் கொரோனா தொற்றிற்கு உள்ளாகினர்.

இதன்மூலம் தொற்றாளர் எண்ணிக்கை 3,081 ஆக உயர்ந்தள்ளது.

கட்டாரிலிருந்து நாடு திரும்பிய 22 பேர், மாலைதீவிலிருந்து நாடு திரும்பிய 6 பேர், இந்தியாவிலிருந்து திரும்பிய 2 பேர், ஐக்கிய அரபு எமிரேட்ஸிலிருந்து திரும்பிய ஒருவர், இந்திய கடலோடி ஒருவர் தொற்றுடன் அடையாளம் காணப்பட்டனர்.

இதேவேளை, மேலும் 11 பேர் குணமடைந்த வெளியேறியுள்ளனர். இதன்மூலம் குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 2,879 ஆக உயர்ந்துள்ளது.

பத்து வெளிநாட்டினர் உட்பட 190 பேர் தற்போது சிகிச்சை பெற்று வருகின்றனர்.

மேலும் 54 நபர்கள் தொற்று சந்தேகத்தின் பேரில் கண்காணிப்பில் உள்ளனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here