கட்டாரிலிருந்து வந்த ஒரே விமான பயணிகள் 54 பேருக்கு கொரோனா!

கட்டாரிலிருந்து நாடு திரும்பிய மேலும் 22 பேர் கொரோனா தொற்றுடன் அடையாளம் காணப்பட்டுள்ளனர். இதன்மூலம் தொற்றாளர்களின் மொத்த எண்ணிக்கை 3,071 ஆக உயர்ந்துள்ளது.

கட்டாரிலிருந்து நாடு திரும்பிய 32 பேர் நேற்று தொற்றுடன் அடையாளம் காணப்பட்டனர். இன்று காலை மேலும் 22 பேர் தொற்றுடன் அடையாளம் காணப்பட்டனர்.

நேற்று காலை 10 மணி முதல் இன்று காலை 10 மணி வரையான காலப்பகுதிக்குள் 54 பேர் தொற்றுடன் அடையாளம் காணப்பட்டுள்ளனர். கட்டாரிலிருந்து 398 இலங்கையர்களை ஏற்றி வந்த விமானத்தில் பயணம் செய்த 54 பேரே தொற்றுடன் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

தொற்றால் பாதிக்கப்பட்ட 3071 பேரில் 2868 பேர் முழுமையாக குணமடைந்துள்ளனர், 191 பேர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here