முகக்கவசத்திற்குள் ஹெரோயின் கடத்திய பலே ஆசாமி சிக்கினார்!

முகக்கவசத்திற்குள் மறைத்து ஹெரோயின் கடத்திய நபரை பொலிசார் கைது செய்துள்ளனர்.

கணேமுல்லை, கலஹிட்டியவ பகுதியில் இந்த சம்பவம் நடந்தது.

கணேமுல்லை பொலிசாருக்கு கிடைத்த இரகசிய தகவலின் அடிப்படையில் சந்தேக நபரை சோதனையிட்டபோது, ​​அவரது முகக்வசத்திற்குள் 7 சிறிய ஹெரோயின் பொதிகள் கண்டுபிடிக்கப்பட்டது.

36 வயதுடைய சந்தேக நபர்  பாடசாலை மாணவர்களை இலக்கு வைத்து ஹெரோயின் விற்பனையில் ஈடுபட்டு வந்ததாக பொலிசார் தெரிவித்தனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here