மின்னல் தாக்கி பெண் பலி!

மின்னேரிய, ஜயந்திரபுர பகுதியில் மின்னல் தாக்கியதில் பெண் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

குறித்த பகுதியில் வயல் ஒன்றில் விவசாயத்தில் ஈடுபட்டுக் கொண்டிருந்த கணவன் மனைவி மீது இவ்வாறு மின்னல் தாக்கியுள்ளது.

மின்னல் தாக்கியதில் பலத்த காயங்களுக்கு உள்ளான இருவரும் ஜயந்திபுர வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் மனைவி உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

உயிரிழந்தவர் பொலன்னருவை ஜெயந்திபுரவை சேர்ந்த பி.சான்ரிகா தமயந்தி (43) என அடையாளம் காணப்பட்டுள்ளார்.

அவர் இலங்கை இராணுவத்தில் பணியாற்றி ஓய்வு பெற்றவர்.

சம்பவத்தில் காயமடைந்த கணவர் மேலதிக சிகிச்சைகளுக்காக பொலன்னறுவ வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here