திருமணம் செய்தும் விட்டுவைக்காத வெறித்தனமான ஒருதலைக் காதலன்: முல்லைத்தீவில் உயர்தர மாணவன் கைது!

சக மாணவியொருவரின் மார்பிங் புகைப்படங்களை இணையத்தளத்தில் பதிவேற்றி, அவரை மிரட்ட முயன்ற உயர்தர மாணவன் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

முல்லைத்தீவில் இந்த சம்பவம் நடந்தது.

குறிப்பிட்ட மாணவன் நீண்டகாலமாக சக மாணவியொருவரை ஒரு தலையாக காதலித்து, அவரை தொல்லைப்படுத்தி வந்துள்ளார். தன்னை காதலிக்குமாறு மிரட்டியும் பார்த்தார். எதுவும் பலனளிக்காத நிலையில், யுவதியின் முகத்தை ஆபாசப்படங்களில் பொருத்தி பதிவேற்றினார் என மாணவன் மீது குற்றம்சாட்டப்பட்டது.

அந்த படங்களை பதிவேற்றிய பின்னரும், தன்னை காதலிக்கும்படி மிரட்டியதாக கூறப்படுகிறது.

மாணவனின் வெறித்தனமாக காதலால் மாணவி அச்சமடைந்து பாடசாலை செல்வதை நிறுத்தியதை தொடர்ந்து, மாணவிக்கு திருமணம் செய்து வைக்கப்பட்டுள்ளது.

இருந்தாலும், ஒருதலைக்காதலன் அடங்கவில்லை. மீளவும் மாணவியின் படங்களை ஆபாசப்படங்களாக சித்தரித்து, பதிவேற்றியதாக குற்றம்சாட்டப்பட்டுள்ளது.

இது குறித்து யுவதியின் பெற்றோர் பதிவு செய்த முறைப்பாட்டின் அடிப்படையில் உயர்தர மாணவனான-ஒரு தலைக்காதலன் கைது செய்யப்பட்டுள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here