குட்டி லண்டனின் சோகக் கதை: ஏமாற்றபட்ட குதிரை பந்தய திடல் மக்கள்!

நுவரெலியா நகரம் குட்டி லண்டன் என அழைக்கப்படும் நகரமாகும். இங்கு அனைத்து விடயங்களும் அழகாக காணப்பட்ட போதும். நகரத்தின் மத்தியில் காணப்படும் குதிரை பந்தய திடலில் வாழ்ந்து வரும் மக்கள் தற்போது பல்வேறுப்பட்ட அடிப்படை வகதிகள் இன்றி தொடர்ந்து 4 தலைமுறைகளாக- 150 வருடங்களுக்கு மேல் அடிப்படை வசதிகள் இன்றி பாதிப்புக்கு உள்ளளாகியுள்ளனர். தற்போதும் 55 தற்காலிக வீடுகளில சிறுவர்கள் முதியோர்கள் உட்பட 300 பேர் வாழ்ந்து வருகின்றனர்.

ஆங்கிலேயர் காலத்திலேயே இந்த குதிரை பந்தய திடல் அமைக்கபட்டது. அப்போது அங்கு வேலை செய்வதற்கும் குதிரைகளை பராமரிப்பதற்கும் இவர்கள் அழைத்து வரப்பட்டார்கள். இதன் நிர்வாகம் ஆங்கிலேயரினாலும் பின்னர் நுவரெலியா நகர சபையும் 2000 ஆம் ஆண்டுக்கு பின்னர் விளையாட்டுத்துறை அமைச்சும் நடாத்தி வருகின்றது.

இந்த காலப்பகுதியில் மேற்டி மக்களின் அடிப்படை தேவைகளை எவரும் பூர்த்தி செய்யாத நிலையில் பல்வேறுப்பட்ட பிரச்சனைகளுக்கு முகம் கொடுத்து வருகின்றனர். தற்போதும் தற்காலிக இறப்பர் சீட் மூலம் வேயப்பட்ட வீடுகளில் வாழ்ந்து வருகின்றனர். குடிப்பதற்கு முறையான நீர்¸ மலசலகூடம்¸ மின்சாரம்¸ போக்குவரத்து¸ சுகாதாரம்¸ சிறுவர் பாரமரிப்பு மற்றும் வசதிகள் இன்றியும் பல சமூகப்பிரச்சனைகளுக்கும் முகம் கொடுத்துள்ளனர்.

தற்போது இருக்கின்ற வீட்டை கூட திருத்தி அமைப்பதற்கு விளையாட்டுத்துறை அமைச்சு தடுத்து வந்தது. தங்கள் வீடுகளை எந்தவிதமான அபிவிருத்திகளையும் செய்ய முடியாது. அதனை பார்வையிடுவதற்கு அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். இவர்களுக்கு கிடைக்க வேண்டிய வசதிகளையும் மறுத்து வருகின்றது. மழைக் காலங்களில் வெள்ளத்தினாலும் பாதிப்படைந்தனர். இந் நிலையில் சம்பந்தப்ட்ட அதிகாரிகள் தங்களுக்கு முறையான தீர்வை பெற்றுத்தருமாறு மக்கள் கோரிக்கைளை முன் வைக்கின்றனர்.

இந்த விடயம் தொடர்பாக நுவரெலியா மாவட்ட பாராளுமன்ற உறுப்பினரும் முன்னால் அமைச்சருமான கலாநிதி வே. இராதாகிருஸ்ணன் கவனத்திற்கும் அப்போது கொண்டு வந்தனர். அதன் பயனாக விளையாட்டுதுறை அமைச்சின் அதிகாரிகளிடம் தொடர்பு கொண்டு பேச்சுவார்ததை நடாத்தி வேறு இடத்தில் 46 புதிய வீடுகள் கட்ட தீர்மானித்து இந்த மக்களின் பிரச்சனைக்கு தீர்வினை பெற்றுக் கொடுப்பதற்றான நடவடிக்கை எடுக்கபட்ட போதும் இது வரைக்கும் நடைமுறைப்படுத்தவில்லை. இந்த திட்டம் தொடர்பான வரை படங்கள் கூட வெளியாகின. அதிகாரிகளும் நேரடியாக வந்து பார்வையிட்டு சென்றனர். இவ்வாறான நிலையில் இந்த செயற்திட்டம் முறையாக நடைமுறைப்படுத்தாமை வேதனைக்குரியதுடன், இதனை உடனடியா நடைமுறைப்படுத்துமாறு மக்கள் கோரிக்கை விடுக்கின்றனர்.

பாதிப்புக்கு உள்ளான மக்கள் தங்களுக்கு புதிய வீட்டுத்திட்டம் வருகின்றது என்று ஆசையுடன் இருக்கும் வேளையில் மேலும் ஒரு புதிய ஏமாற்றம் வந்துள்ளது. அதுதான் இவர்கள் வாழும் இடத்திற்கு அருகிலேயே விளையாட்டுத்துறைக்கான உல்லாச விடுதி அமைக்கும் செயற்திட்டம். தற்போது இந்த செயற்திட்டத்திற்கு பல மில்லியன் ரூபா செலவு செய்து இந்த விடுதி அமைக்கப்பட்டு வருகின்றது. பாதிக்கபட்ட மக்கள் அந்த விடுதியை பார்த்து கவலை அடைந்தும் வருகின்றனர்.

இருக்க விடு இல்லை. வீடு ஒழுகுகின்றது. வெள்ளத்தால் பாதிப்பு. சிறுவர்கள் முதல் பெரியோர்கள் வரை பாதிப்பு. பல சமூக சீர்கேடுகள் கண் முன்னனே நடைபெற்றறுக் கொண்டு இருக்கும் இவ்வேளையில் இவர்களுக்கு வீடு அமைப்பதற்கு பதிலாக விளையாட்டுதுறை அமைச்சு உல்லாச விடுதி அமைப்பது வேதனைக்குரியதே.

04 தலைமுறைகளாக இந்த பிரதேசத்தில் வாழும் மக்களின் பிரச்சனைக்கு உரிய தீர்வினை சம்பந்தப்பட்டவர்கள் பெற்றுக் கொடுக்க வேண்டும். தொடர்ந்து இந்த மக்கள் 05 ஜனாதிபதிகளையும் பல அரசியல் பிரமுகர்களையும் உருவாக்குவதற்கு காரணமாக இருந்துள்ளனர். சிலர் இங்கையே பிறந்து வாழ்ந்து இறந்தும் உள்ளனர்.

இந்த பிரதேசத்தில் வாழும் மக்ககளின் பிள்ளைகளுக்கு குறித்த வீடுகளில் இருந்து கல்வி கற்க முடியாத நிலையும் தோன்றி உள்ளது. இளைஞர் யுவதிகள் வேறு இடங்களுக்கு சென்றால் தாங்கள் இருக்கும் இடத்தை கூட யாரிடமும் சொல்வதில்லை. காரணம் பிரதேசத்தின் அவல நிலை.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here